ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!
தமிழகக்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக, வரும் 2021-ஆம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்துள்ளது.
- ஒரு காளையுடன் உரிமையாளர், ஒரு உதவியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- காளையுடன் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என சான்று பெற்றிருக்க வேண்டும்.
- ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடநாடு நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 300 பேர் வரை கலந்துகொள்ளலாம்.
- ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு 7 நாட்களுக்கு முன்பு பதிவு செய்து அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
- ஜல்லிக்கட்டு போட்டிகளை காண 50 சதவீதம் பார்வையாளர்களே அனுமதிக்கப்படுவர் என அறிவிப்பு.
- போட்டியில பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என சான்று பெற்றிருக்க வேண்டும்.
- ஜல்லிக்கட்டு மேற்பார்வை செய்யும் அலுவலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பரிசோதனை கட்டாயம்.