அமலாக்கத்துறை அதிகாரி கைது.. FIRல் கூறப்பட்டுள்ள பரபரப்பு தகவல்கள்!

Published by
பாலா கலியமூர்த்தி

மத்திய அரசின் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அலுவலராக பணி புரிந்து வரும் அங்கித் திவாரி (Ankit Tiwari) என்பவர் கடந்த 29ம் தேதி திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை தொடர்பு கொண்டு அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு முடிந்துபோன வழக்கை சுட்டிக்காட்டி, அவ்வழக்கில் அமலாக்கதுறை விசாரணை நடத்த வேண்டுமென பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், இதனால் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவேண்டும் என கூறியுள்ளார்.

அதன்படி, அந்த அரசு ஊழியர் மதுரைக்குச் சென்றபோது அங்கித் திவாரி அரசு ஊழியரின் காரிலேயே ஏறிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி
தரவேண்டும் என்றும், பின்னர் தனது உயரதிகாரிகளோடு பேசுவதாகத் தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசி உள்ளார். இதனால் அந்த அரசு ஊழியர் முதலில் ரூ.20 லட்சம் பணத்தை அவரிடம் வழங்கி உள்ளார். பின்னர், மேல் அதிகாரிகளுக்கும் பங்குதர வேண்டி உள்ளதால் பேசியபடி
முழுத்தொகை ரூ.51 லட்சத்தையும் தரவேண்டும் என்றும் இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டியுள்ளார் அமலாக்கத்துறை அதிகாரி.

இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அந்த அரசு ஊழியர் திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில் அங்கித் திவாரி அமலாக்கத் துறை அதிகாரி என்றும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரிய வந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

புயலை எதிர்கொள்ள அரசு தயார் – அமைச்சர் ராமச்சந்திரன்

இரண்டாவது முறையாக ரூ.20 லட்சம் லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டபோது அவர் கையும், களவுமாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் பிடிபட்டார். அதனைத் தொடர்ந்து அங்கித் திவாரியின் வீடு மற்றும் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின்போது இவருக்கு தொடர்புயை பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதேபோன்ற யுக்தியை பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த குற்ற நிகழ்வில் பிற அமலாக்கத்துறை அலுவலர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆஜர்படுத்திய நிலையில், அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் அரசு மருத்துவரை மிரட்டி பணம் பறித்தது பற்றி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் FIRல் பரபரப்பான தகவல்கள் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, வெளியாகியுள்ள முதல் தகவல் அறிக்கையில், அரசு மருத்துவர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது சேவையை களங்கப்படுத்திவிடுவதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளார். லஞ்சம் தராவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அரசு மருத்துவரை மிரட்டியுள்ளார். கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மணல் குவாரிகளிலும் சோதனை நடத்தியவர் என கூறப்பட்டுள்ளது.

அங்கித் திவாரியை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு!

ஏற்கனவே பல பேரை மிரட்டி பணம் பறித்துள்ளதால், மணல் குவாரி அதிபர்களிடமும் அவர் லஞ்ச பேரம் பேசினாரா என விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச பணத்தை ஹவாலா பணப்பரிமாற்றம் செய்பவர்கள் மூலம் கொடுத்தனுப்ப முடியுமா என அங்கித் திவாரி மருத்துவரிடம் கேட்டுள்ளார். அமலாக்கத்துறை அதிகாரி அரசு ஊழியர் பல வகையில் பணத்தை கேட்டு மிரட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக மற்ற மருத்துவமனைகளுக்கு சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதாக மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். அமலாக்கத்துறை அதிகாரி திவாரிக்கு ரூ.20 லட்சம் தரப்பட்டது மருத்துவரின் காரில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது எனவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Recent Posts

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

16 minutes ago

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

49 minutes ago

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

2 hours ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

2 hours ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

2 hours ago

வன்கொடுமை விவகாரம் : மாணவி புகார் பெறப்பட்டது எப்படி? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

3 hours ago