தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை முத்திரை சின்னம் வெளியீடு..!

TNBudget2024

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு “2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வருகின்ற 19-ஆம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் இதை தொடர்ந்து 20-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் எனவும் பட்ஜெட் கூட்டம் வருகின்ற 22ஆம் தேதி வரை நடைபெறும்” என அறிவித்தார்.

1 ட்ரில்லியன் பொருளாதாரம்.. வெள்ளை அறிக்கை வேண்டும்.! இபிஎஸ் சரமாரி குற்றசாட்டு.!

அதன்படி தமிழக அரசு சார்பில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டங்களின் விரிவாக்கம் உள்ளிட்டவற்றிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் முத்திரை சின்னத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த முத்திரை சின்னத்தில் தடை தாண்டி … வளர்ச்சி நோக்கி என்ற முழக்கம் இடம் பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்