இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.பின் 30-ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.
இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாங்குநேரி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.