தீயணைப்பு, சிறைத்துறை உள்ளிட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு …!
தீயணைப்பு, சிறைத்துறை உள்ளிட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
சிறை, தீயணைப்பு, மீட்புப் பணிகள் உள்ளிட்ட துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கான எழுத்து தேர்வில் ஐயாயிரத்துக்கும் அதிகமான தேர்வு எழுதியுள்ளனர். இது தொடர்பான தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகியது.
அதனை தொடர்ந்து இந்தாண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி மற்றும் 23 ஆம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 113 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டது. இவ்வாறு நடத்தி முடிக்கப்பட்ட தீயணைப்பு, காவல்துறை, சிறைத்துறை காலி பணியிடங்களுக்கான தேர்வில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் அனைத்தும் www.tnusrbonline.org எனும் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.