12 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை – தமிழ்நாடு அரசு உத்தரவு
26 ஆண்டுகளுக்கு மேல் சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் 12 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உறையற்றினார்.
அப்போது, பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 113ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்து நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது – ஐகோர்ட்
இதையடுத்து ஆயுள்தண்டனை பெற்று 10 முதல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர்களின் தண்டனைகளை குறைத்து, அவர்களை முன்விடுதலை செய்வதற்கான கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திட கடந்த 2022ம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி என்.ஆதிநாதன் அவர்கள் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அக்குழுவின் பரிந்துரைப்படி, கடலூர் மத்திய சிறையிலிருந்து 4 கைதிகளும், கோவை மத்திய சிறையிலிருந்து 6 கைதிகளும், வேலூர் மத்திய சிறையிலிருந்து ஒரு கைதியும், சென்னை புழல் சிறையிலிருந்து ஒரு கைதியும், என மொத்தம் 12 ஆயுள் தண்டனை கைதிகளை நிபந்தனை அடிப்படையில் முன்விடுதலை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
26 ஆண்டுகளுக்கு மேல் சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் 12 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை – தமிழ்நாடு அரசு உத்தரவு#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/UYHvqZwL2S
— TN DIPR (@TNDIPRNEWS) February 6, 2024