தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று பிற்பகல் 2 மணி அளவில் டெல்லியில் தொடங்கியது. இந்த கூட்டம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இதில் தமிழக, கர்நாடக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு பிப்ரவரி மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனைத்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் மேகதாது பற்றி விவாதிக்க வேண்டும் என கர்நாடக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இன்றைய கூட்டத்திலும் மேகதாது பற்றி விவாதிக்க கர்நாடக கூறியது. இதைதொடர்ந்து, மேகதாது பற்றி விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை பிப்.12ம் தேதி தொடங்கும்- சபாநாயகர் அறிவிப்பு!
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பால் மேகதாத திட்ட வரைவு அறிக்கையை நீர்வளத்துறை ஆணையத்திற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…