தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு..!

Cauvery

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று பிற்பகல் 2 மணி அளவில் டெல்லியில் தொடங்கியது. இந்த கூட்டம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இதில் தமிழக, கர்நாடக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்  தமிழகத்திற்கு பிப்ரவரி மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைத்து  காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் மேகதாது பற்றி விவாதிக்க  வேண்டும் என கர்நாடக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இன்றைய கூட்டத்திலும் மேகதாது பற்றி விவாதிக்க கர்நாடக கூறியது.  இதைதொடர்ந்து, மேகதாது பற்றி விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை பிப்.12ம் தேதி தொடங்கும்- சபாநாயகர் அறிவிப்பு!

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பால் மேகதாத திட்ட வரைவு  அறிக்கையை நீர்வளத்துறை ஆணையத்திற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்