மறைந்த குழந்தைக்காக அமைச்சர் கொடுத்த காசோலையை தூக்கி வீசிய தாயார்.!

அமைச்சர் பொன்முடி குழந்தையின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின், முதல்வர் அறிவித்த நிதி உதவியை கையில் கொடுத்த அமைச்சர் நிதியை குழந்தையின் தாய் நிராகரித்தார்.

minister Ponmudy

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். நேற்று பள்ளிக்கு சென்ற எல்கேஜி மாணவி லியோ லட்சுமி (3), திறந்து கிடந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார்.

இதனை அடுத்து, பள்ளி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதால் தனது குழந்தை உயிரிழந்தது எனக் கூறி குழந்தையின் தந்தை பழனிவேல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், இந்த விவகாரத்தில் செயிண்ட் மேரீஸ் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அலட்சிய மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மறைந்த சிறுமி லியா(4) உடலுக்கு அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, அவர் கொடுத்த 3 லட்சம் காசோலையைத் தூக்கி வீசிய சிறுமியின் தாயார், “உசுரே போய்டுச்சி உங்க பணம் யாருக்கு வேணும்” எனக் கூறி அழுதார்.

பின்னர், அவரை  சமாதான படுத்திய அமைச்சர், “தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் விட மாட்டோம்” எனக் கூறி அவரை தேற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்