தமிழக அரசின் பரிந்துரை நிராகரிப்பு., குடியரசு தலைவருக்கே அதிகாரம் – ஆளுநர் தரப்பு
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்வதில் குடியரசு தலைவருக்கே அதிகாரம் உண்டு என்று ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது.
7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையை சட்டத்திற்கு உட்பட்டு மத்திய அரசு பரிசீலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான ஆளுநரின் முடிவு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யபட்டது. பேரறிவாளன் முன்கூட்டியே விடுதலை செய்ய கோரும் மனுமீது விசாரணை வரும் 9-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. எழுவர் விடுதலையில் ஆளுநருக்கே அதிகாரம் என ஏற்கனவே தெரிவித்த நிலையில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது ஆளுநர் தமிழக அரசின் பரிந்துரையை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.