வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் வேட்புமனு பரிசீலனை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்றது. அப்போது, திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதிமுக வேட்பாளர் சண்முகம் கலந்து கொள்ளவில்லை. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் , பொருளாளர் துரைமுருகன் உட்பட அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
அதிமுக வேட்பாளர் A .C சண்முகம் வேட்புமனு பரிசீலனையின் போது அங்கு இருந்த பலர், புதிய நீதிக்கட்சியின் தலைவராக இருக்கும் சண்முகம் அதிமுக வேட்பாளராக போட்டியிடுவதை ஏற்க முடியாதது என்று கூறினர்.இத அடுத்து அவரது மனு ஏற்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
அதே போல் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு மீதான பரிசீலனையின் போது பணப்பட்டுவாடா புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் வேட்பளர் போட்டியிட முடியாது என்றனர், இதனால் கதிர் ஆனந்த் வேட்பு மனுவும் நிறுத்தி வைக்கப்பட்டது.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின், பிற்பகல் 1.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த A .C சண்முகம் தான் அதிமுக உறுப்பினர் என்று கூறி உறுப்பினர் அட்டையை காண்பித்தார். பின்னர் அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்களின் வழக்கு சம்பத்தப்பட்ட ஆவணங்களை வழக்கறிஞர் மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்தார். அதனால் அவரது வேட்புமனுவும் ஏற்கப்பட்டது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…