#BREAKING: நெல்லையில் அமமுக வேட்பாளர் மனு நிராகரிப்பு..!
நெல்லை அமமுக வேட்பாளர் பால்கண்ணன் வேட்புமனு நிராகரிப்பு.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகின்ற 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேடர்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி நேற்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. அதைப்போல கன்னியாகுமரி மக்களவைத் இடைத்தேர்தல், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நெல்லையில் அமமுக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் பால்கண்ணனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. பால்கண்ணனின் வேட்பு மனுவை முன்மொழிந்த 10 பேரில் 3 பேர் தொகுதி வேட்பாளர் அல்ல என்பதாலும் முன்மொழிந்தவர்களின் பாகம் எண் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறி மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பால்கண்ணனின் மாற்று வேட்பாளர் ரமேஷ் கண்ணனின் வேட்புமனு பரிசீலனையில் உள்ளது.