முதல்வர் தொடங்கிய குத்தகை ஆவண பதிவு இணையம் வாயிலாக ஆரம்பம்.!
பதிவுத்துறை இரசீது ஆவணங்கள் மற்றும் குடியிருப்பு தொடர்பான குத்தகை ஆவண பதிவு ஆகியவற்றினை இணையவழி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
நேற்று மதுரையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் தொடங்கும் விழாவில் புதிய திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் முக்கியமாக பதிவுத்துறை ரசீது ஆவணம் தொடர்பான இணையவழி சேவையை நேற்று தொடங்கி வைத்தார்.
அதாவது, பதிவுத்துறை செயல்பாட்டின் கீழ் செயல்படும், நடவடிக்கைகளை எளிதாகும் நோக்கில் பதிவுத்துறை இரசீது ஆவணங்கள் மற்றும் குடியிருப்பு தொடர்பான குத்தகை ஆவண பதிவு ஆகியவற்றினை இணையவழி சேவைகள் மூலம் பயன்படுத்தும் வண்ணம் வழிவகை செய்யப்பட்டதை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
நேற்று தான் பதிவு துறையில் போலி பத்திரங்களை கண்டறிந்து அது எப்போது பதியப்பட்டு இருந்தாலும், அதனை நீக்கும் அதிகாரம் சார் பதிவாளருக்கு வழங்கும் வகையில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.