நளினி வழக்கை பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவு!
நளினி மனுவை விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி மற்றொரு தண்டனை கைதியான நளினி சென்னை உயர் நீதிமாமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணையின்போது, நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்க முடியாது, ஜாமீன் கோரி நளினி உச்சநீதிமன்றத்தை தான் அணுக முடியும் என்றும் தெரிவித்திருந்தது. முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் நளினியின் வழக்கை மார்ச் 24க்கு இன்று ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில், இன்று விசாரணையின்போது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்ய கோரும் நளினி மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரிக்கை வைத்துள்ளார். 42 மாதங்களாக எந்த முடிவும் எடுக்காததால் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்ட்டுள்ளது என்று நளினி மனுவில் தெரிவித்துள்ளார்.