கொரோனாவால் உயிரிழந்த சென்னை மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததற்காக கீழ்பாக்கம் பகுதி மக்கள் 20 பேரின் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறை கைது செய்துள்ளனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பால் 55 வயது மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். இவரின் உடலை கீழ்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்ய ஊழியர்கள் சென்றனர்.
ஆனால், கீழ்பாக்கம் பகுதி மக்கள் மருத்துவரின் உடலை கீழ்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் மருத்துவரின் உடல் வேறு இடத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.
இது குறித்து, மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததாக கீழ்பாக்கம் பகுதி மக்கள் 20 பேரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவர்கள் மீது, ஊழியர்களை வேலை செய்யவிடாமல் தடுத்தது, கொலைமிரட்டல், ஊரடங்கு மீறல், சிறைபிடித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான டெல்லி கணேஷ் வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு காலமானார். அன்னாரது…
சென்னை : உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முத்த நடிகர் டெல்லி கணேஷின் (80) மறைவு பெரும்…
சென்னை : அரசு முறைப் பயணமாக 2 நாள் சுற்றுப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் கள ஆய்வை நேற்று…
விருதுநகர் : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்த அறிக்கையில், அத்தியாவசியமற்ற செலவுகளை…
சென்னை : நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,சமூக வலைதளைத்தில் திரைத்துறை…
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…