மாநிலங்களவை தேர்தல்… தேமுதிகவுக்கு வாய்ப்பு மறுப்பு..!
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அதிமுக அறிவித்துள்ளது.
அதில் கே.பி.முனுசாமி , தம்பிதுரை மற்றும் த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் தேமுதிகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் அறிவித்தவுடன் அதிமுக கூட்டணிக் கட்சியான தேமுதிக மாநிலங்களவை எம்.பி தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என கொண்டனர்.
ஆனால் தேமுதிக வாய்ப்பளிக்காமல் ஜி.கே.வாசனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.இது தேமுதிக மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.