ஜாமீன் மறுப்பு.. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! இன்றுடன் முடிகிறது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்!

Senthil balaji case hc

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரது நீதிமன்ற காவலும் இன்றுடன் முடிவடைகிறது. எனவே, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதன்பின் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்ற காவலை தொடர்ந்து, 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து செந்தில் பாலாஜியிடம் பல்வேறு கட்டங்களாக விசாரணை மேற்கொண்டது. சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் செந்தில் பாலாஜியிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி மீண்டும் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், ஜாமீன் வழக்கை சிறப்பு நீதிமன்றம், முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிப்பதா என குழப்பம் நீடித்தது. இருப்பினும், ஜாமீன் கோரிய வழக்கை சென்னை முதன்மை நீதிமன்றமே விசாரிக்கும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே வேளையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கூடாது, ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை அளித்துவிடுவார் என தெரிவித்த அமலாக்கத்துறை மீண்டும் விசாரணைக்கு கோரியிருந்தது. இதனிடையே, சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிறை மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதனைத்தொடர்ந்து, ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை செந்தில் பாலாஜி தரப்பு நாடியது. உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க கோரி கோரிக்கை விடுக்கப்பட்டது. அதுபோன்று, ஜாமீன் வழங்க கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜிக்கு சிறையில் உள்ளே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கலாமே என நீதிபதிகள் தெரிவித்தன. இதன்பின் இரு தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில், வழக்கறிஞர் ராம் சங்கர், சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..!

அந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக்கோரி, சீனியர் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, சுப்ரீம் கோர்ட் நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்பு முறையீடு செய்தார். இருப்பினும், அடுத்த வாரம் நவராத்திரி மற்றும் தசரா பண்டிகையையொட்டி உச்சநீதிமன்றத்துக்கு 10 நாட்கள் விடுமுறை என்பதால், வரும் 30ம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகிறது. கடைசியாக கடந்த 13ம் தேதி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 8வது முறையாக நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இன்று வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 8-வது முறையாக காவல் நீட்டிப்பு..!

இந்த சூழலில்  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில், இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைகிறது. இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு மீண்டும் காவல் நீடிக்கப்படும் என கூறப்படுகிறது. ஏனென்றால், செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் நீடிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
trump tariffs
manoj kumar
Rohit Sharma Zaheer Khan
tn rain update
waqf bill 2025
venkatesh iyer ipl