திருச்சியில் 6 ரயில் நிலையங்களில் ரத்ததான ரயில்களுக்கு பணத்தை திரும்ப பெறும் தேதிகள் அறிவிப்பு!
திருச்சியில் 6 ரயில் நிலையங்களில் ரத்ததான ரயில்களுக்கு பணத்தை திரும்ப பெறும் தேதிகள் அறிவிப்பு.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மார்ச் 22ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் பயண கட்டணத்தை திருப்பி பெற்றுக்கொள்வதற்கான தேதிகளை திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.