மீண்டும் மறுவாக்குப்பதிவு? ஒப்புகை சீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்தும் இன்னும் தேர்தல் களம் பரபரப்பாகவே இருக்கிறது. ஏற்கனேவே தர்மபுரி,தேனி , கடலூர், திருவள்ளூர், ஈரோடு என இந்த நான்கு தொகுதிகளிலும் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்ததாக கூறி வருகிற 19ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில், தற்போது மேலும், 43 வாக்குச்சாவடிகளில் உள்ள ஒப்புகைசீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குபதிவில் முறைகேடு நடந்தால் ஒப்புகை ஒப்புகை சீட்டு என்னும்போது தெரிந்துவிடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முறைகேடுகள் இருந்தால் உடனே தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹு தெரிவித்துள்ளார்.
DINASUVADU