பிஎஃப் வைப்பு நிதிக்கான வட்டிக் குறைப்பு – ஓபிஎஸ் அறிக்கை

Default Image

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக் குறைப்பை மறு பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஓபிஎஸ் அறிக்கை

அந்த  அறிக்கையில், அசாம் மாநிலத்தில் நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழுக் கூட்டத்தில், கடந்த இரண்டு ஆண்களாக நீடித்து வந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.5 விழுக்காட்டிலிருந்து 8.1 விழுக்காடாக குறைக்க முடிவு எடுத்துள்ளதாகவும், இதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், இந்த வட்டிக் குறைப்பு நடைமுறைக்கு வரும் என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

2015-16 ஆம் ஆண்டில் 8.8 விழுக்காடாக இருந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் படிப்படியாக குறைந்து தற்போது 8.1 விழுக்காடு என்ற நிலைக்கு வந்திருக்கிறது. மேற்படி வட்டிக் குறைப்பு என்பது கடந்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டி விகிதம் ஆகும். அதாவது, 1977-78 ஆம் ஆண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 விழுக்காடாக இருந்தது. கிட்டத்தட்ட அந்த நிலைக்கு தற்போது வட்டி விகிதம் வந்துவிட்டது.

இது ஏற்கத்தக்கதல்ல 

சர்வதேச சூழ்நிலை, சமூகப் பாதுகாப்பு மற்றும் சந்தை நிலைத்தன்மை, கொரோனா பாதிப்பு, உக்ரைன் போர், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் பணக் கொள்கையில் சிக்கனத்தைக் கடைபிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக கூறினாலும், அரசின் வருவாயைப் பெருக்கவும், செலவுகளை குறைக்கவும், சிக்கனத்தைக் கடைபிடிக்கவும் வழிகள் இருக்கின்ற நிலையில், பல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல. இதன்மூலம் பாதிக்கப்படுபவர்கள் 6 கோடியே 40 இலட்சம் ஏழை, எளிய தொழிலாளர்கள்.

மறுபரிசீலனை செய்க 

இந்த வட்டிக் குறைப்பு: நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டுமென தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.

எனவே, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக் குறைப்பினை மறுபரிசீலனை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதோடு, இதனை மத்திய அரசின் கவனத்திற்கு நேரடியாக எடுத்துச் சென்று, வலியுறுத்தி, தேவையான அழுத்தத்தை அளித்து, வட்டிக் குறைப்பு நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தி.மு.க. அரசையும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்