ஊரடங்கு நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும் – நாராயணசாமி

Published by
பாலா கலியமூர்த்தி

மே 17க்கு பிறகும் ஊரடங்கு நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தீவிரம் காரணமாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு மிக பெரிய பொருளாதார சரிவை கண்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு துறையை சார்ந்தவர்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்டவைகள் கடனுதவி வழங்கி வருகிறது. 

இந்நிலையில், மே 17க்கு பிறகும் ஊரடங்கு நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு நீட்டிப்பில் மாநில முதலமைச்சர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும், இல்லையெனில் மாநில அரசு கேட்கும் நிதியையாவது மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். இதனிடையே இந்த ஊரடங்கு காலத்தில் புதுச்சேரியில் தனி கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதனால் வீதிகளில் மக்கள் அதிக கூட்டம் அதிகமாக கூடுவதால், கடைகள் திறக்கப்படும் நேரத்தை மாற்றி அமைக்கலாமா என்பது குறித்து பேரிடர் மேலாண்மை அமைப்பின் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது என்றும் வர்த்தக சபை, வணிகர் கூட்டமைப்பு, சிறு கடைகள், பெரிய கடைகள் வியாபாரிகள் அமைப்பின் தலைவர்களிடமும் பேசியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அரசு எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், கடைகள் திறக்கும் நேரத்தை மாற்றி அமைப்பதற்கும் முழு சம்மதம் தெரிவித்தனர். இன்னும் ஒரு சில நாட்களில் பரிசீலனை செய்து, எந்தெந்த கடைகளை எந்த நேரத்தில் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதை அரசு அறிவிக்கும் என கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…

7 mins ago

இலங்கையில் சாதனை படைத்த NPP.! தனி பெரும்பான்மை நிரூபித்த புதிய அதிபர்.!

கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…

13 mins ago

Live : இலங்கை அதிபர் தேர்தல் முதல்., செந்தில் பாலாஜி மீதான ஊழல் புகார் வரையில்…

சென்னை : நடைபெற்ற இலங்கை  புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர்  அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…

32 mins ago

ரூ.397 கோடி ஊழல்? செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் பரபரப்பு புகார்!

சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…

1 hour ago

நியூஸிலாந்து பார்லிமென்ட்டில் நடனம் ஆடி எதிர்ப்பைத் தெரிவித்த பெண் எம்.பி! வைரலாகும் வீடியோ!

வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…

2 hours ago

மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7ஆயிரம் கோடி அபராதம்! ஐரோப்பிய ஆணையம் அதிரடி!

வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…

3 hours ago