#RedAlert: வங்க கடலில் புயல்; தமிழகத்தில் 3 நாட்கள் அதீத கனமழை பெய்யும்.!
வங்க கடலில் புயல் மையம் கொண்டுள்ள நிலையில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது, அந்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலின் மத்திய பகுதியில் நிலைகொண்டு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறவும் புதிய புயல் உருவாகவும் வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் தென்தமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு அறிவுறுத்தியுள்ளது.
அந்த வகையில், வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை அதித கனமழை பெய்ய கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.