வாகை மலர், போர் யானை, சிவப்பு – மஞ்சள், 28 நட்சத்திரங்கள்.. த.வெ.க கொடியின் குறியீடு என்ன.?
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கட்சியின் கொடி எப்படி உள்ளது? அதில் இருக்கும் சின்னங்கள் எதை கூறுகிறது என்று பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அறிமுகம் செய்து வைத்தார். விஜய் கட்சியின் கொடியில் மேலும், கீழும் அடர் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் உள்ளன. மஞ்சள் நிறத்தின் மத்தியில் வாகை மலர், நட்சத்திரங்கள் உள்ளன. வாகை மலரின் இருபக்கமும் கால்களை தூக்கியபடி 2 போர் யானைகள் பிளிறியபடி உள்ளன.
பொதுவாக, பழங்காலத்தில் தமிழ் மன்னர்கள் போருக்கு சென்று வெற்றி சூடியபிறகு அணிவது வாகை மலராகும். விஜய் கட்சியின் கொடி எப்படி உள்ளது? அதில் இருக்கும் சின்னங்கள் எதை கூறுகிறது என்று பார்க்கலாம்.
சிவப்பு – மஞ்சள்
தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள சிவப்பு என்பது அரசியல் ரீதியில் புரட்சிக்கான நிறமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக உலகம் முழுக்க கம்யூனிச சித்தாந்தத்தை குறிக்கும் நிறமாகவும் சிவப்பு நிறம் பார்க்கப்படுகிறது. சிவப்பு நிறம் பொதுவாக ஆற்றல், வலிமையை குறிக்கிறது. அதே போல, மஞ்சள் நிறம் என்பது நம்பிக்கை நிறமாக பார்க்கப்படுகிறது. மகிழ்ச்சி, வெற்றியை குறிக்கும் நிறமாகவும் மஞ்சள் நிறம் திகழ்கிறது.
வாகை மலர்
“வாகை மலர்” என்பது பலதரப்பட்ட கலை, கலாச்சாரம், மற்றும் சமூகத்தில் முக்கியத்துவம் பெறும் ஒரு தனிச்சிறப்பு கொண்ட பெயராகும். தமிழில் ‘வாகை’ என்ற சொல்லுடன், ‘வெற்றி’ என்று பொருள்படும் இந்த மலரால் செய்யப்பட்ட மாலையை அணிந்ததால், இந்த மரம் வாகை என்று அழைக்கப்படுகிறது. இது குறிப்பாக வெற்றியின் அடையாளமாகக் பார்க்கப்படுகிறது. ஆம், வாகை மலர், தமிழர்களின் பாரம்பரியத்தில், சங்க கால மன்னர்கள், போர்களில் வெற்றியின் அடையாளமாகக் கருதினர்.
நட்சத்திரங்கள்
தவெக கட்சிக் கொடியில் இடம் பெற்றுள்ள வாகை மலரைச் சுற்றி 28 நட்சத்திரங்கள் அமைந்துள்ளது. அதில் 23 நட்சத்திரங்கள் பச்சை நிறத்திலும், கீழே உள்ள 5 நட்சத்திரங்கள் நீல நிறத்திலும் உள்ளது. அது என்ன சொல்ல வருகிறது என நெட்டிசன்கள் கூறுகிறார்கள் என்றால், நீல நிறம் என்றாலே இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் விதமாக ஊக்குவிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இருக்கும் பிரச்னைகளை தவெக தீர்வு காணுவது போல உள்ளது.
பச்சை நிற நட்சத்திரங்கள்
பச்சை நிறம் என்றாலே அது செழிப்பை குறிக்கிறது எனக் கூறுகிறார்கள். அதாவது கொடியில் அமைந்துள்ள 23 நட்சத்திரங்களும் வரும் காலத்தில் தமிழ்நாட்டில் செழிப்பாக இருக்கும் என்பதை குறிக்கலாம் என கூறி வருகிறார்கள்.
அதாவது மொத்தமாக இந்த நட்சத்திரம் என்ன சொல்ல வருகிறது என்றால், கீழ உள்ள சில அடிப்படை பிரச்சனைகளை (5 நீல நட்சத்திரம்) சரி செய்தால், தமிழ்நாடு செழிப்பாக (23 நட்சத்திரம்) இருக்கும் என்பதை குறிக்கும் வகையில் அந்த வட்ட வடிவில் நட்சத்திரம் இருப்பதாக கூறுகிறார்கள்.
யானை குறியீடு எதற்கு?
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியில் நடுவில் இரண்டு போர் யானைகள் இருக்கிறது. அந்த காலத்தில் போர் என்றால் யானைகளை கொண்டு சென்று போர் செய்து வெல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விலங்குகளில் மீகவும் பலமான விலங்குகளில் ஒன்று தான் யானை. எனவே, யானை ஒரு வெற்றியின் முக்கிய குறியீடு என்பதால் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியில் வைத்திருக்கலாம் கூறப்படுகிறது.
குறிப்பு : – இந்த கொடிக்கு பின்னல் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்பு ஒன்று உள்ளது எனவும், அதனை மாநாட்டில் சொல்வதாகவும் விஜய் தெரிவித்தார்.