செம்மரம் கடத்தல் – தமிழகத்தை சேர்ந்த 22 பேர் கைது!

Sandalwood smuggled

ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் கடத்த முயன்ற தமிழகத்தை சேர்ந்த 22 பேர் உட்பட மொத்தம் 25 பேரை அம்மாநில தடுப்பு பிரிவு காவல்துறை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் செம்மரங்கள் அதிகம் இருப்பதால், இதனை வெட்டி பல காலங்களாக கடத்தல் சம்பவம் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் ஆந்திர மாநில அரசு, செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவு ஒன்றை உருவாக்கி  செம்மரம் கடத்தலை தடுத்து வருகின்றனர்.

இந்த சமயத்தில் ஆந்திராவில் செம்பரம் கட்டை கடத்துவதாக தடுப்பு பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சாலை வழியாக செல்லும் லாரிகளை சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையின்போது சுமார் 20 பேர் கொண்ட குழு ஒரு லாரியில் சுமார் 11 செம்மரம் கட்டைகள் கடத்தியாக கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று மற்றொரு இடத்தில் செம்மரம் வெட்டி கடத்துவது தெரிவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு சென்று செம்மரம் கடத்த முயன்றவர்களை கைது செய்தனர். இந்த நிலையில், ஆந்திராவில் செம்மரம் கடத்த முயன்ற தமிழகத்தை சேர்ந்த 22 பேர் உட்பட மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூ.60 லட்சம் மதிப்பிலான 21 செம்மரம் கட்டைகளை பறிமுதல் செய்து, ஆந்திர காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு லாரி, 2 இருசக்கர வாகனம், செல்போன்கள் மற்றும் மரம் அறுக்க பயன்படுத்தப்படும் ரம்பம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்