நாகப்பட்டினதிற்கு ரெட்..சென்னைக்கு ஆரஞ்சு..!நாளை எந்த மாவட்டங்களுக்கு என்னென்ன அலர்ட்!
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.
அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில், காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
இந்நிலையில், நாளை என்னென்ன மாவட்டங்களுக்கு என்னென்ன அலர்ட் சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி…
நாளை (29.11.2024) : ரெட் அலர்ட்
- செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழைக்கு வாய்ப்பு.
ஆரஞ்சு அலர்ட் :
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையக்கு வாய்ப்பு.
மஞ்சள் அலர்ட் :
- ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.