வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்தது,ரெட் அலெர்ட் வாபஸ்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை 3-4 மணி அளவில் புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடையே கரையை கடந்தது.இது தற்பொழுது வட தமிழகம் மீது நிலைக்கொண்டுள்ளது இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி ,தருமபுரி,திருப்பத்தூர்,வேலூர் ,ஈரோடு,சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது 150 கி.மீ தொலைவில் இருக்கும் போதே சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த ரெட் அலெர்ட் விலக்கிக்கொள்ளப்பட்டு ஆரஞ்சு அலெர்ட்டாக மாறியது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் விடப்பட்டிருந்த ரெட் அலெர்ட் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும்,மீனவர்களுக்கான எச்சரிக்கை இன்று மதியம் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…