ரெட் அலர்ட் தொடரும்! அதி கனமழை தான், மேகவெடிப்பு அல்ல… வானிலை ஆய்வு மையம்!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் வரலாறு காணாத கன மழையை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் சமீபத்தில் சந்தித்த நிலையில், நேற்று முன்தினம் முதல் தென் தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசியில் அதி கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசும், அரசு அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தென் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் இந்த 4 மாவட்டங்களில் அதி கனமழை இன்று தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தலைவர் பாலச்சந்திரன், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட் தொடர்கிறது. தென் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் கனமழை பெய்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடிப்பதால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். வழக்கமாக வளிமண்டல சுழற்சியால் இவ்வளவு மழை பதிவாகாது.  நாள் முழுவதும் மழை பெய்துள்ளது, ஆனால், இதை மேகவெடிப்பு என கூற முடியாது.

கனமழை…. 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

இதனால், 4 மாவட்டங்களில் பெய்தது அதி கனமழை தான், மேகவெடிப்பு அல்ல. வாய்ப்பு அடிப்படையிலேயே எச்சரிக்கை விடுக்கப்படும். எதையும் சொல்ல முடியாது. இதனால் தற்போதையை சூழலை கணித்தே ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகியுள்ளது.

தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 95 செமீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 2 நாட்கள் கனமழை தொடரும் என்றும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 5 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என தெரிவித்தார்.

மேலும், விருதுநகர், தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 1931ம் ஆண்டுக்குப் பிறகு பாளையங்கோட்டை பகுதியில் அதிகமழை பதிவாகியுள்ளது. 90 செ.மீ மழை பெய்யும் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ரெட் அலர்ட் என்றால் 21 செ.மீ அளவுக்கு மேல், எவ்வளவு வேண்டுமானாலும் மழை பெய்யலாம் எனவும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Recent Posts

எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…

6 minutes ago

செங்கோட்டையன் விவகாரம் : “யாரும் எங்கும் போகலாம்..,” கடுப்பான இபிஎஸ்!

சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…

13 minutes ago

தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026 : வெளியான முக்கிய அறிவிப்புகள் இதோ….

சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…

1 hour ago

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக வல்லவர்கள்…பட்ஜெட்டில் ஒன்னு இல்லை..இபிஎஸ் காட்டம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…

2 hours ago

கரும்பு சாகுபடிக்கு ரூ. 10.63 கோடி…மலர் சாகுபடிக்கு ரூ.8 கோடி! பட்ஜெட்டில் வந்த முக்கிய அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…

2 hours ago

வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,

சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…

3 hours ago