தேனி, கோவை, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 4 மாவட்ட மலைப்பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி படி படியாக புயலாக மாற வாய்ப்புள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், நாளை முதல் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும், தேனி, கோவை, திண்டுக்கல், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இந்த 4 மாவட்டங்களு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி, நீலகிரி, நெல்லை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 கிமீ வேகத்தில் இடி மின்னல் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் ஏனைய மாவட்டங்கள் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாப்புள்ளதாகவும், அரபிக் கடலில் 50 கிமீ முதல் 60 கிமீ வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…