திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாவட்டங்களில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இல்லங்களை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு ஏராளமான மக்கள் முடங்கியுள்ளனர்.
தென்மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பெய்துவரும் கனமழை காரணமாக, தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த சூழலில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 1 மணி வரை விருதுநகர், மதுரை மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்துள்ளது – தலைமைச் செயலாளர் பேட்டி
அதுமட்டுமில்லாமல், அடுத்த வரும் 24 மணி நேரத்தில் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மேலும், குமரி கடல், அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நீடித்து வருவதால், தேனி, நீலகிரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுபோன்று, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, நேற்று முன்தினம் முதல் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், தற்போது 4 மாவட்டங்களுக்கு அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தென் தமிழகத்தில் டிசம்பர் 18ம் தேதி கனமழை முதல் மிக கனமழை (204.4 மிமீக்கு மேல்) தொடர வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (மே 20,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகதின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் இன்று மதியம்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு…
சென்னை : ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து விவகாரம் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும்…
சென்னை : மின் கட்டணத்தை 3% உயர்த்த மின் வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என தகவல்…
சிவகங்கை: சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…