“நிவார் புயல்” தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.!
நிவார் புயல் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை காலத்தின் முதல் புயல் வருகிற 25ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலுக்கு நிவார் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
10 மாவட்டங்களுக்கு ரெட்:
இந்நிலையில், இந்த நிவார் புயல் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 10 மாவட்டங்களிலும் தேசிய மீட்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
கனமழை:
அந்த வகையில், நிவார் புயல் தமிழக-புதுவை கரையை நெருங்கவுள்ளதால் இன்று நாகை, தஞ்சை, திருவாரூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே போல், நாளை டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூரில் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிதுள்ளது.