ரூ.300 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு – அமைச்சர் சேகர்பாபு
காஞ்சி ஏகம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 49 கிரவுண்ட் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டதாக அமைச்சர் அறிவிப்பு.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் காஞ்சி ஏகம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 49 கிரவுண்ட் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீடுக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கத்தில் மீட்க்கப்பட்ட கோயில் நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.300 கோடி என தெரிவித்தார்.
இன்னும் ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. விரைவில் அவற்றை மீட்போம். இதுவரை ரூ.1,000 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலநூறு கோடிகள் இந்தாண்டு இருதுக்குள்ளாகவே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக்கும் நடவடிக்கையை மேலும் தீவிரமாக ஈடுபடுவோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.