ரூ.641 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு – இந்து சமய அறநிலையத்துறை
ரூ.641 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.
தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பு பேரவையில் கொடுக்கப்பட்டது. அதில், திமுக அரசு அமைந்த பிறகு 203 ஏக்கர் அளவிலான வேளாண் நிலங்களும், 170 கிரவுண்டு அளவிலான காலி மனைகளும், மீட்கப்பட்டு திருக்கோயிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் இதன் சொத்து மதிப்பு ரூ.641 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.