புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த சிலமணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் ஆலடிகொல்லை பேருந்துநிலையத்தில் அருகில் ஒரு நிழற்குடை உள்ளது, மேலும் மூதாட்டி ஒருவர் சென்றுள்ளார் அப்போது அங்கு ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது , உடனடியாக அந்த மூதாட்டி எங்கு சத்தம் கேட்கிறது என்று தேடி பார்த்துள்ளார், மேலும் நிழற்குடையின் உள்ளே ஒரு பையில் ஒன்று இருந்துள்ளது, மேலும் அந்த பையை திறந்து பார்த்தபோது அந்தப் பையில் பிறந்த சில மணி நேரங்களே ஆன ஒரு ஆண்குழந்தை இருந்துள்ளது.
இந்நிலையில் இதனால் பதற்றமடைந்த அந்த மூதாட்டி அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களுக்கு குரல் எழுப்பியுள்ளார், அதற்கு பிறகு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையை கைப்பற்றி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர் .
மேலும் அங்கு அந்த ஆண் குழந்தைக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது உடல் நலமாக உள்ளது, மேலும் இந்நிலையில் அந்த குழந்தைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் வாங்கிக் கொடுத்தனர்.
மேலும் இதுகுறித்து கீரமங்கலம் காவல்துறையினர் யார் இந்த ஆண்குழந்தையை வீசி சென்றது என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது, மேலும் பிறந்த சில மணி நேரங்கள் ஆன இந்த குழந்தையை தூக்கி வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…