#recovery: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5,718 பேர் மீண்டனர்.!
தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5,718 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,40,943 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தினந்தோறும், கொரோனா பதிப்பிலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீண்டு வீடு திரும்பி வருகிறனர். அந்த வகையில், இன்று 5,718 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 5,86,454 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா பாதிப்பால் 68 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,052 ஆக அதிகரித்துள்ளது.