சென்னை மெட்ரோ ரயிலின் சாதனை பயணம்!
சென்னை மெட்ரோ ரயிலில் 6.09 கோடி பேர் பயணித்து புதிய சாதனை படைத்துள்ளது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 2022 ஆம் ஆண்டில் 6.09 கோடி பேர் பயணங்கள் செய்து இதுவரை இல்லாத புதிய உச்சத்தை அடைந்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2015இல் தொடங்கிய சென்னை மெட்ரோ, 7 வருடங்களில் புதிய சாதனையாக 6.09 கோடி பேர் பயணித்துள்ளனர்.
மெட்ரோ ரயில்சேவைகள், பொதுமக்களுக்கு நேரம் மிச்சப்படுத்தி பாதுகாப்பான பயணத்தையும் கொடுத்து வருகிறது. சென்னை மெட்ரோ தொடங்கியதிலிருந்து நாளுக்குநாள் மக்களின் கூட்டமும் அதிகரித்து வருகிறது.