மதுரை எய்ம்ஸுக்கு அனுமதி வழங்கலாம்… தமிழக அரசுக்கு சுற்றுசூழல் குழு பரிந்துரை.!  

Madurai AIIMS

சென்னை : மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கு சுற்றுசூழல் அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு 1,977 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 222 ஏக்கரில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை சுற்றுச்சுவர் தவிர வேறு ஏதும் கட்டப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது. 33 மாதங்களில் கட்டி முடிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளுக்கான அடுத்தடுத்த நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்காக சுற்றுச்சூழல் அனுமதி பெற எய்ம்ஸ் நிர்வாகமானது தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து இருந்த நிலையில், சுற்றுசூழல் நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசுக்கு எய்ம்ஸ் மருத்துவ கட்டுமான பணிகளுக்கான நிபந்தனைகளை விதித்து பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி மதுரை எய்ம்ஸ் மருத்துவ கழிவுகளை பயோ கியஸாக மாற்றி மருத்துவமனை கேண்டினில் சமைக்க பயன்படுத்த வேண்டும். மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைக்க வேண்டும். மழை நீர் வடிகால் வசதி, குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் போன்றவற்றை அமைக்க வேண்டும். எலக்ட்ரிக் வாகன வசதிகள், கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்துதல் போன்ற அமைப்புகளை அமைக்க வேண்டும் எனக் கூறி நிபந்தனைகளுடன் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்கலாம் என தமிழக சுற்றுச்சூழல் அமைப்பு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்