கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் விளைவாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தமிழகத்தில் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க 12 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டது.
நேற்று இந்த மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுக்களுடன் தமிழகத்தில் கொரோனாவின் நிலை , தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று மருத்துவ குழுக்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு கொண்டார். முதல்வர் உடனான ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு மருத்துவ வல்லுநர் குழு சார்பில் மருத்துவர் பிரதீபா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .
அப்போது , தமிழகத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் அரசு எடுக்கும் தடுப்பு நடவடிக்கை சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 14 ம் தேதிக்கு பின்னர் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க தமிழக முதலமைச்சரிடம் மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளோம் என தெரிவித்தார்.
நேற்று முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் பேட்டியளிக்கும் போது தமிழகம் 2-வது நிலையில் இருந்து மூன்றாவது நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது.மேலும் தமிழகத்தில் உள்ள நிலைமையை பொருத்தே ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…