அங்கீகாரம் முக்கியம்! தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எச்சரிக்கை!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரமின்றி போலி சான்றிதழ் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்று இருக்க வேண்டும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலர் மேக்நாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆணையம் செயலர் கூறுகையில், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்கள் தமிழ்நாட்டில், மாநில மற்றும் தேசிய போட்டிகள் நடத்திட வேண்டும். அங்கீகாரம் பெற்ற மாநில விளையாட்டு சங்கங்கள் மற்றும் தொடர்புடைய அகில இந்திய சம்மேளனம் வழங்கிடும் சான்றிதழ்கள் மட்டுமே பொறியியல், பிற தொழில்முறை படிப்புகளில், 3% விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு மற்றும் உயரிய ஊக்க தொகை வழங்கிட பரிசீலிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்தி வெளியீடு#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @Udhaystalin @mp_saminathan @SportsTN_ pic.twitter.com/zJm3mMQWRw
— TN DIPR (@TNDIPRNEWS) September 19, 2023