ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் தி.மு.க அரசு அமைந்தவுடன் நிறைவேற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியாயமான கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட ஜாக்டோ – ஜியே அமைப்பினரின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய அதிமுக ஆட்சி 5068 ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு 17(பி)-யின் கீ குற்றக் குறிப்பாணைகள் வழங்கி போரின்னலுக்கு உள்ளாக்குவது கண்டனத்திற்குரியது.போராட்டத்தை திரும்பப் பெற முதலமைச்சரே வேண்டுகோள் விடுத்து – பிறகு ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்திருப்பது வஞ்சகமான அணுகுமுறை.
ரகசியக் குறிப்பேடு நீக்கம், குடும்பங்களுக்கு பாதுகாப்பு நிதி, கருணை அடிப்படையில் வேலை, ஈட்டிய விடுப்பை சரண் செய்தால் பணம், திருமணம் – வாகனம் – வீடு கட்டக் கடன், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், சத்துணவுப் பணியாளர்களுக்கு கால முறை ஊதியம், சாலைப்பணியாளர் – மக்கள் நலப்பணியாளர் நியமனம் கலந்தாய்வு மூலம் பணி மாறுதல், ஆசிரியர் நியமனம் என திமுக ஆட்சிதான் ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் வாழ்வில் ஒளியேற்றி உயர்வு தந்தது.
அதிமுக ஆட்சி, நள்ளிரவில் கைது செய்து – ஒரே நாளில் லட்சக்கணக்கானவர்களை டிஸ்மிஸ் செய்த போது அரணாக அன்றும் இன்றும் நிற்கிறது திமுக.அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் மீதான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும். மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி அமைந்ததும் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை…
மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர்…
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…
புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…