மதுரையில் துணிக்கடைகளை திறந்துகொள்ள அனுமதி.! சில நிபந்தனைகளோடு…
மதுரையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் நாளை முதல் காலணி மற்றும் துணிக்கடைகள் ஏ.சி வசதி இன்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் இதுவரை 9ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிவப்பு மண்டலமாக அறியப்படும் மதுரை மாவட்டத்தில் இதுவரை 123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 83 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
தற்போது 38 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் காரணமாக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது கூடுதல் தளர்வாக நாளை முதல் காலணி மற்றும் துணிக்கடைகள் ஏ.சி வசதி இன்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் பிறப்பித்துள்ளார். நோய்க் கட்டுப்பாடு காரணமாக தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் இந்த கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையில் செயல்படும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.