புயல் நிவாரணத்துக்காக யாருடனும் இணைந்து பணியாற்ற தயார் ..!கமல்ஹாசன் அதிரடி
புயல் நிவாரணத்துக்காக யாருடனும் இணைந்து பணியாற்ற தயார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், கஜா புயல் பாதிப்பை பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமரிடம், முதல்வர் வலியுறுத்த வேண்டும்.தென்னைக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.நிவாரண உதவி போதுமானதாக இல்லை, உயிரிழப்புக்கு குறைந்தது ரூ.20 லட்சம் தர வேண்டும்.புயல் நிவாரணத்துக்காக யாருடனும் இணைந்து பணியாற்ற தயார் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.