ஆசிரியர்களுக்காக இன்று நாள் முழுவதும் காத்திருக்க தயார்.! அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.!
சென்னையில் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வேலையில் ஈடுபட்ட வந்த இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்றும், பகுதிநேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு , பணி நிரந்தரம் உளியிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 12,500 ரூபாய் உயர்த்தியும் , 10 லட்சம் ரூபாய் வரையில் ஆசிரியர்களுக்கு காப்பீடு, சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்து பின்னர் இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். இதனை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில் தங்கள் கோரிக்கைகள் குறித்து ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை சந்திக்க கோரியதாக தெரிகிறது. இதற்காக இன்று காலையில் காத்திருந்தும் எந்த ஆசிரியர்களும் வரவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்கள் வருவார்கள் என காலை முதல் காத்திருந்தேன். யாரும் வரவில்லை. காலை 8.30 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தேன். யாரும் வரவில்லை. அதனால் தற்போது மாணவர்களை சந்திக்க ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டு இருக்கிறேன். மீண்டும் நேரம் ஒதுக்கியுள்ளேன். இன்று முழுக்க கூட நான் ஆசிரியர்களுக்காக காத்திருக்க தயார்.
அவர்களிடம் நான் கூறுவது ஒன்று தான். அனைவரும் ஒன்றுகூடி ஒருமித்த கருத்தை , கோரிக்கையை என்னிடம் கூறுங்கள். அவர்களிடத்திலேயே ஒற்றுமை இல்லாதது போல தெரிகிறது. என ஆசிரியர்கள் சந்திப்பு பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
அடுத்ததாக சிஏஜி அறிக்கை பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், அரசு பள்ளி மாணவர்கள் போட்டி நுழைவு தேர்வில் கலந்துகொள்ள பயிற்சிக்காக மத்திய அரசு ரூ.4.7 கோடி செலவு செய்யப்பட்டதாக சிஏஜி அறிக்கை வெளியாகியுள்ளது. நீட் மற்றும் ஜேஇஇ (ஐஐடி நுழைவு தேர்வு) நுழைவு தேர்வுக்காக 385 மையங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2018 – 2019 ஆண்டிற்க் மட்டுமே பல கோடி ரூபாய்க்கு டிஸ் ஆண்டனா பொறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆண்டு வெறும் 103 நாட்கள் மட்டுமே மாணவர்கள் பயன்பாட்டுக்கு அவை இயக்கப்பட்டுள்ளது.
நுழைவு தேர்வு வழிகாட்டு புத்தகம் ரூ.3.14 கோடி ரூபாக்கு வாங்கப்பட்டு அதனை மாணவர்கள் யாருக்கும் வழங்கவிலை. மீண்டும் அடுத்த வருடம் சுமார் 2 கோடி ரூபாக்கு புத்தகங்களை அதிகாரிகள் கொள்முதல் செய்துள்ளனர். இந்த அறிக்கை குறித்த கேள்விகள் அதிகாரிகள் மத்தியில் வரும். அதக்ரு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் கூற வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.