அரசியலை விட்டு விலகத் தயார்.! இபிஎஸுக்கு உதயநிதி ‘போட்டோ’ சவால்.!

Published by
மணிகண்டன்

Udhayanidhi Stalin : நான் காலில் விழுவது போல போட்டோ காண்பித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன் – உதயநிதி ஸ்டாலின்.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கடந்த சில நாட்களாக ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். உதயநிதி விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிச்சாமியும், பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு உதயநிதியும் மாறி மாறி பிரச்சார மேடைகளில் பதில் கூறி வருகின்றனர்.

எய்ம்ஸ் செங்கல் :

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசை விமர்சித்து மதுரையில் இன்னும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டப்படவில்லை எனக் கூறி, கடந்த தேர்தலை போல இந்த தேர்தலிலும் செங்கல்லை காட்டி வாக்கு சேகரித்து வந்தார். இதனை குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமி முதலில் விமர்சனம் செய்தார்.  ‘ஏப்பா, உதயநிதி ஸ்கிரிப்ட்டை மாத்துப்பா. கல்லை காட்டி காட்டி போர் அடிக்குது.’ என்று விமர்சனம் செய்து இருந்தார்.

பல்லை காட்டும் இபிஎஸ் :

இந்த விமர்சனத்தை மேற்கோள் காட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  பிரதமர் மோடியும் எடப்பாடி பழனிச்சாமியும் இருக்கும் புகைப்படத்தை காண்பித்து. நான் கல்லை காட்டுகிறேன். எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் பல்லை காட்டுகிறார் என விமர்சனம் செய்தார்.

இபிஎஸ் பதிலடி :

அடுத்து, நேற்று தூத்துக்குடி வந்த எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், சிரித்தால் பல் தான் தெரியும் எனக் கூறி, அண்மையில், போதை பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உடன் உதயநிதி ஸ்டாலின் இருக்கும் புகைப்படத்தை காண்பித்து நீங்கள் எதை காண்பிக்கிறீர்கள் என்று மீண்டும் விமர்சனம் செய்திருந்தார்.

அரசியலில் இருந்து விலக தயார்…

தற்போது, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்கும் போது சசிகலாவின் காலில் விழுந்த புகைப்படத்தை காண்பித்து, இதே போல நான் காலில் விழும் புகைப்படத்தை நீங்கள் காண்பித்தால், நான் அரசியலை விட்டு விலக தயார் என்று திருவண்ணாமலை பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பகிரங்கமாக சவால் விடுத்தார்.  இதற்கு எடப்பாடி பழனிச்சாமி என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

5 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

7 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

9 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

9 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

10 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

11 hours ago