முதலமைச்சர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா ? மு.க.ஸ்டாலின்
எந்த விசாரணைக்கும் தயார் என்று அடிக்கடி பேட்டியளிக்கும் முதலமைச்சர் தலைமைப் பொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா ? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் ‘ஸ்மார் சிட்டி’ உள்ளிட்ட ரூ.12,000 கோடி மதிப்புள்ள பணிகளைக் கவனித்து வரும், தலைமைப் பொறியாளர் நடராஜன் திடீரென்று மாற்றப்பட்டு, சட்ட விதிகளுக்கு மாறாக, சென்னை மாநகராட்சியில் ‘டம்மி’ பதவியில் அமர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நடராஜனுக்குப் பதில், சென்னை மாநகராட்சியிலிருந்து புகழேந்தி என்ற முதன்மை தலைமைப் பொறியாளர் நியமிட்டக்கப்பட்டுள்ளார்.
தனக்கு வேண்டியவருக்கு திரும்ப திரும்ப பதவி உயர்வு கொடுத்து, அமைச்சர் எஸ்.பி வேலுமணி அந்த பொறுப்பில் நியமித்திருக்கிறார். ரூ.17,000 கோடி திட்டங்களில் நடைபெற்றுள்ள ஊழலில் ‘பாதுகாப்புக் கவசம்’ அமைத்துக் கொள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் இப்படி செயல்படுகிறார். எந்த விசாரணைக்கும் தயார் என்று அடிக்கடி கூறிவரும்,இந்த ரூ.17,000 கோடி திட்டம் குறித்தும் ,நடராஜன் மாற்றம் குறித்தும் முதலமைச்சர் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“எந்த விசாரணைக்கும் தயார் என்று அடிக்கடி பேட்டியளிக்கும் முதலமைச்சர் – நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா?”
– கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை.
Link: https://t.co/J2aoqITk54#DMK #MKStalin pic.twitter.com/4jIjsY7syD
— DMK (@arivalayam) July 5, 2020