வெள்ளை அறிக்கை வெளியிடவும் தயார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2ம் அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கொரோனா மற்றும் தடுப்பூசி பணி குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டுக்கு கூடுதலாக தடுப்பூசிகள் பெறுவதற்காக நாளை மறுநாள் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன். தடுப்பூசிகள் விவரத்தை தினந்தோறும் வெளிப்படையாக தெரிவிக்கிறேன். இதற்கு மேலும் தேவை என்றால் வெள்ளை பேப்பரில் வெள்ளை அறிக்கையாக எழுதி தருகிறேன் என கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், ஒரு தடுப்பூசியை பயன்படுத்தும் போது நிச்சயமாக 11 பேர் இருப்பதை உறுதி செய்துவிட்டு செலுத்துவதால் தடுப்பூசி வீணாவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லிக்கு சென்று தமிழகத்திற்கு போதிய கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கும் படி கோரிக்கை வைக்கவுள்ளனர்.
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…
சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…