‘நேசக்கரம் நீட்ட தயார்’ – திமுகவை வீழ்த்த மெகா கூட்டணி அமைக்க வேண்டும் – டிடிவி
திமுகவை வீழ்த்த மெகா கூட்டணி அமைக்க வேண்டும். அந்த கூட்டணிக்கு நேசக்கரம் நீட்ட தயார் என டிடிவி பேட்டி.
தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். திமுக என்கிற தீயசக்தியை வருங்காலத்தில் வீழ்த்த வேண்டுமன்றால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் கூட்டணி அமைத்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும்.
எனவே திமுகவை வீழ்த்த மெகா கூட்டணி அமைக்க வேண்டும். அந்த கூட்டணிக்கு நேசக்கரம் நீட்ட தயார். கூட்டணி தலைமை குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்துகொள்ளலாம்.