குஷ்புவுக்கு ஓட்டுப் போட தயாரா? – சி.டி.ரவி கேள்வி..!
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் பிரச்சாரத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், திருவல்லிக்கேணியில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ரவி, தமிழகத்தின் நண்பர் பிரதமர் மோடி மற்றும் பாஜக எனவும் தமிழகத்திற்கு எதிரி காங்கிரஸ் மற்றும் திமுக என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். சகோதரி குஷ்புவுக்கு ஓட்டு போட தயாராக என கேள்வி எழுப்பினார்.
மோடி ஆட்சியின் போதுதான் தமிழகத்திற்கு பல திட்டங்கள் வந்து உள்ளது. ஆனால் பாஜகவில் இருந்து ஒரு எம்.பி, எம்எல்ஏ கூட தமிழகத்தில் இல்லாததது நியாயமா..? என கேள்வி எழுப்பினார்.