தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்யத் தயார் – ரஜினிகாந்த் ட்வீட்
நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் ரஜினிகாந்தை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.இதன் பின்னர் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், எங்கள் நியாயங்களைப் புரிந்து கொண்டார்.குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகள் குறித்து ரஜினியிடம் தெளிவாக விளக்கினோம் .மக்களின் அச்சத்தைப் போக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என ரஜினி எங்களிடம் கூறினார் என்று தெரிவித்தார்.
???????? pic.twitter.com/erIYGE4hDv
— Rajinikanth (@rajinikanth) March 1, 2020
இந்நிலையியில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து,அவர்கள் தரப்பு ஆலோசனைகளை கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.எப்போதும் அன்பும்,ஒற்றுமையும்,அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.