நிர்வாகிகள் விரும்பினால் போட்டியிடத் தயார்! – சரத்குமார்
ஈரோடு இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவேரா மறைவையடுத்து, பிப்.27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சியினர் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ், தேமுதிக போன்ற காட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில் தேமுதிக தனித்து போட்டியிடப்போவதாக பிரேமலதா விஜயகாந்த அறிவித்து இருந்தார். இதனையடுத்து, சமத்துவமக்கள் கட்சியும் தேர்தலில் போட்டியிட்டால் தனித்து தான் போட்டியிடப்போவதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஈரோடு இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. ஆனால் தலைமை கழக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தால் போட்டியிட தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக மிகப்பெரிய கட்சி பிரிந்து இருப்பதால் பலவீனம் அடைந்துள்ளது; அதிமுக கட்சி இணைந்து இருக்க வேண்டும் என்பது எனது கருத்து என தெரிவித்துள்ளார்.