நீங்கள் சொல்லும் இடத்திற்கு இப்போ கூட வர தயார்- ஸ்டாலின் சவால்..!
நேற்று சென்னை வட கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவொற்றியூர் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்கள் படும் துன்பங்களுக்கு, துயரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும். இன்னும் நான்கு மாதத்தில் ஆட்சி மாற்றம் வரப்போகுது, அதில் எந்த மாற்றமும் இல்லை. உலகத்திலேயே இந்த கொரோனா தொற்றுக்கு மத்தியில் மக்களை நேரில் சந்தித்து உதவி செய்த ஒரே கட்சி திமுகதான்.
கொரோனா காலத்திலும் நாம் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களை நேரடியாக சந்தித்து பல்வேறு உதவிகளை வழங்கி உள்ளோம். ஆளும் கட்சி செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் எதிர்கட்சியாக நாம் நிறைவேற்றிக் காட்டியுள்ளோம். கொரோனா காலத்திலும் முகக்கவசத்தில் கொள்ளை ப்ளீச்சிங் பவுடரில் கொள்ளையடித்த ஆட்சி, இன்னும் வெட்கத்தைவிட்டு சொல்கிறேன், துடைப்பத்தில் கூட கொள்ளையடித்த ஆட்சி அதிமுகத்தான் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால் இந்த கொள்ளை போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆளுநரிடம் ஆதாரத்துடன் ஊழல் பட்டியலை கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம். பொத்தாம் பொதுவாக ஏதோ வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று கொடுக்கவில்லை. ஆதாரத்துடன் பட்டியலை சமர்ப்பித்து இருக்கிறோம். முதல்வர் முதல் கடைக்குட்டி அமைச்சர் வரை ஆதாரத்துடன் பட்டியலை சமர்ப்பித்து இருக்கிறோம்.
நேருக்கு நேர் விவாததிக்க தயாரா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நான் தயார்தான், எங்க வேணும் என்றாலும் வரேன், நான் சொல்லும் இடத்தில் கூட வேண்டாம். நீங்கள் சொல்லும் இடத்திற்கு இப்போ கூட வர தயார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் வாங்கி விட்டு வாருங்கள். ஏனென்றால் உச்சநீதிமன்த்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதை பற்றி விசாரிக்கக் கூடாது என்பதுதான் மரபு என தெரிவித்தார்.